News

Tuesday, 25 April 2023 02:07 PM , by: R. Balakrishnan

Online games

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அனைத்து விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள் (New Rules)

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக வழக்கு தொடரப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இந்தாண்டு தான் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து மசோதாவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டினை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் 2023 என்கிற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் மே 21ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வர இருக்கிறது.

இந்த விதிமுறைகளின் படி உள்ளூர் மற்றும் வெளியூர் விளையாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். அதாவது, சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் செயலாளரிடம் ரூ.1 லட்சம் கொடுத்து பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேற்பார்வையிட்டு அடுத்த 15 நாட்களுக்குள் செயலாளர் அந்த விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்யலாம் அல்லது ஏற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தவறான தகவல்களை கொடுத்து இந்த விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தால் அந்த விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படும் எனவும், நிராகரிப்பு செய்யப்படுவதற்கு முன்பாகவே விண்ணப்பம் செய்த அந்த நிறுவனத்திற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நிராகரிப்பு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட 15 நாட்களுக்குள் நிறுவனத்தின் சார்பில் இருந்து பதில் அனுப்ப வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

PF பயனாளிகளுக்கு மொபைலில் இப்படி ஒரு வசதி இருக்கா: தெரிந்து கொள்ளுங்கள்!

மீண்டும் உயரந்த முட்டை விலை: அதிருப்தியில் பொதுமக்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)