News

Sunday, 28 March 2021 03:20 PM , by: Daisy Rose Mary

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கான இணையதள பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் சேர ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நேரடியாகச் சென்று பதிவு செய்யலாம்.

ஒன்றாம் வகுப்புக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம்.

இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு 08.04.2021 காலை 8 மணி முதல் 15.04.2021 மாலை 4 மணி வரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடைபெறும்.

2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அட்டவணையின் படி https://kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தில் 11-ஆம் வகுப்பில் சேர்வதற்கான படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது நாடு முழுவதும் 1247 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)