தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதிப்பருவத்தேர்வுகள், (Semester Exams) பேராசிரியர்கள் கண்காணிப்பில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், தமிழகம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகளும் 29 இணைப்புக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் வேளாண் சார்ந்த பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள் 2,365 பேர் பயிற்று வருகின்றனர்.
இணையவழித் தேர்வு (Online Exam)
இந்நிலையில் கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டும், மாணவர்களின் நலனுக்காகவும், இணையதளம் வழியாக பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதியாண்டுத் தேர்வுகளும் இணையதளம் மூலம் ஆன்லைன் தேர்வாக (Online Exams) நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் முனைவர் கு. சூரியயநாத சுதந்தரம் கூறுகையில், தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். முனைவர் .நீ. குமார் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, கணினி, செல்போன் மற்றும் மடிக்கணினிகளைக் கொண்டு இணையவழியில் தேர்வு எழுதுவதற்கு வழிமுறைகள் உருவாக்கப்பட்டன.
இதற்காக மாணவர்களுக்கும், குளறுபடிகளைத் தடுக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதுதொடர்பானக் கருத்தரங்குகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் தற்போது இறுதியாண்டுத் தேர்வுகளை இணையவழியாக எழுதி வருகிறார்கள். தேர்வுகள் செப்டம்பர் 2ம் தேதி தொடங்கின. வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்களைக் கண்காணிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 171 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!
மூலிகை அறிவியல் பட்டயப்படிப்பு - உயர்கல்வியைத் தொடர ஒரு சிறந்த வாய்ப்பு!