வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை விடுவது தொடர்பாக இன்று முடிவு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டகளாக பள்ளிகள் ஆன்-லைன் வாயிலாக செயல்பட்டு வந்தது. இந்த ஆண்டும் முதல் இரண்டு மாதங்கள் பள்ளிகள் ஆன்-லைன் வழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. 3 ஆம் அலை கொரோனா பாதிப்பு முடிவடைந்து தற்போது வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக மார்ச் மாதம், முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி மாத இறுதிக்குள் தேர்வுகள் முடிவடையும், அதே போல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்வுகள் முடிவடையும், இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு தேர்வுகள் தாமதமாக மே மாதம் நடைபெற உள்ளது. மேலும் முதலாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் மே மாதத்தில் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனால் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது விடப்படும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதற்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதில் என்ன என்பதை பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் தாமதமாக தொடங்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 50 சதவிகிதம் முதல் 65 சதவிகிதம் வரை பாட்டதிட்டங்களை நடத்தும் படி கூறியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாக பாடத்திட்டங்களை முடித்துள்ளதாகவும், ஒரு சில பள்ளிகளில் இன்னும் 5 சதவகித பாடங்கள் முடிவடையாமல் உள்ளதாகவும், அதனை இந்த மாத இறுத்திக்குள் முடிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது எனவும் அவர் உறுதியளித்தார். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக வேலை நாட்களை குறைக்கும் படி கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்தவர், தொடக்கப்ள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விடுவது தொடர்பாக இன்று அல்லது நாளை முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
கோடை விடுமுறை எப்போது, எத்தனை நாட்கள்? (When and how many days are summer vacations?)
கோடை விடுமுறையை பொறுத்தவரை 10 அல்லது 12 நாட்கள் இருக்கும் என கூறியுள்ளார். 10 ஆம் வகுப்பு, 12 வகுப்பு தகுந்தாற் போல் விடுமுறை விடப்படும் என தெரிவித்திருக்கிறார். உடனடியாக அடுத்த வருடத்திற்கான பாடத்திட்டம் தொடங்க வேண்டிய நிலை இருப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த ஒரு வருடத்திற்கு, தற்போதைய நிலை நீடிக்கும் என தெரிவித்தவர், இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே கோடை விடுமறை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் விடப்படும் என அறிவித்தார்.
மேலும் படிக்க:
ஆடுகளின் ஜீரண தன்மையை அதிகரிக்க உதவும் முருங்கைக்காய்!
மழைக் காலத்திற்கு ஏற்ப பாத பராமரிப்பு - நோய்களையும் தவிர்த்திடலாம்!