தமிழக இளைஞர்கள் முதலமைச்சரின் அலுவலகம் உட்பட அரசின் முதன்மைத் திட்டங்களில் பயிற்சி பெற உதவும் புத்தாய்ப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி இளைஞர்களுக்கு 2 ஆண்டுகால பயிற்சி வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்கு ஊதியமாக ரூ.60,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் 2 ஆண்டுகாலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கும் முதல்வரின் புத்தாய்வு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி, இதில் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் தமிழக அரசு முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணி மற்றும் முதல்வர் அலுவலகம் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 30 இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தகுதி
-
22 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 33 வயது வரையும் தளர்வு அளிக்கப்படும்.
-
தேர்வு முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
-
தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படும்.
ஊக்கத் தொகை
தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் மற்றும் போக்குவரத்து, தொலைபேசி, இணைய வசதி ஆகியவற்றுக்காக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்தத் திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு 5.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பெண் விவசாயிகள் காளான் உற்பத்தி கூடம் அமைக்க ரூ.1.லட்சம் மானியம்