பொருளாதார வெற்றிக்கு இயற்கை விவசாயமும் அடிப்படையானது என பிரதமர் நரேந்தி மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதேபோல், இனி வரும் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் என்பது ஒரு வெற்றிகரமான இயக்கமாக மாறும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
காந்திநகர், குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
மோடி பெருமிதம்
அப்போது அவர், இனி வரும் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் என்பது ஒரு வெற்றிகரமான இயக்கமாக மாறும் என்றார். இதனை மேற்கொள்ளும் விவசாயிகள் இதன் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.
உற்பத்தி அதிகரிக்கும்
இயற்கை விவசாயம் என்பது நமது பூமித்தாய்க்கு செய்யும் சேவையை போன்றது என்று தெரிவித்த அவர், இதன் மூலமாக மண்ணின் தரம், உற்பத்தி ஆகியவற்றை உயர்த்த முடியும் என்று கூறினார். மேலும் பொருளாதார வெற்றிக்கு இயற்கை விவசாயமும் அடிப்படையானது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இயற்கை விவசாயம் மண்ணுக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கும் கேடு விளைவிக்காத விவசாயம் என்பதால்தான், ஆதி காலத்தில் நம் நாட்டின் பாரம்பரிய விவசாயமாக, இயற்கை விவசாயம் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
சூரிய சக்தி பம்ப் செட் பராமரிப்பு மையம் அமைக்க ரூ.4 லட்சம் மானியம்!