வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. கிடு கிடுவென அதிகரித்த மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு ‘ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.
சரண்டர்
பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சிலர், கூடுதலாக உள்ள இணைப்புகளை சரண்டர் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தி அறிவித்தன.
ரூ.2,000க்கு மேல்
இந்த புதிய கட்டணத்தின்படி, 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோர் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டண உயர்வால் வாடகை வீடுகளில் குடியிருப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஷாக்
ஒவ்வொருவரும் கூடுதலாக ஆயிரத்திற்கும் மேல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. ஏ.சி. பயன்படுத்தும் வீடுகளில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்தது. மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு 'ஷாக்'காக இருந்து வந்த நிலையில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதமே வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக பயன்பாடு, கடைகள் போன்றவை பொதுவாக பயன்படுத்தப்பட்ட படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அந்த பாதிப்பு இப்போதுதான் தெரிய வந்துள்ளது.
இணைப்பு சரண்டர்
சொந்த குடியிருப்புகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பொதுவான பயன்பாட்டிற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடியிருப்புகளுக்கு வணிக ரீதியிலான கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. இதனால் சாமான்ய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சிலர் கூடுதலாக உள்ள இணைப்புகளை சரண்டர் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க...
ஆதார் அட்டைதாரர்களுக்கு ரூ.4.78 லட்சம்- விபரம் உள்ளே!
ஜெயலலிதா மரணம்: விசாரிக்கிறதா சிபிஐ?- சிக்குகிறார்கள் அவர்கள்!