மருத்துவமனைகள் பதிவு உரிமம் பெற, ஆக்சிஜன், வென்டிலேட்டர் வசதி கட்டாயம் என, மருத்துவ சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள் உள்ளன. இவை தொடர்ந்து செயல்பட, தமிழக மருத்துவ சேவை இயக்ககத்தின் பதிவு உரிமம் பெறுவது அவசியம். மேலும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்
செயற்கை சுவாசம் (Artificial respiration)
பதிவு உரிமம் பெற இதுவரை, 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், அனைத்து வசதிகளும் இருந்த 30 ஆயிரம் மருத்துவமனைகளுக்கு மட்டுமே, பதிவு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 5,000 மருத்துவமனைகள் பதிவு உரிமம் பெற்று உள்ளன.
இதுகுறித்து, மருத்துவ சேவைகள் இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிக்கேற்ப, ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். செயற்கை சுவாசம் அளிக்கக்கூடிய, 'வென்டிலேட்டர்' வசதியும் இருக்க வேண்டும்.
அவசர காலத்தில் பயன்படுத்த சாய்வுதள வசதிகள், மின்துாக்கி உள்ளிட்ட வசதிகள், கட்டாயம் இருக்க வேண்டும். இதுபோன்ற வசதிகள் இருக்கும் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு மட்டுமே பதிவு உரிமம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்தாமலும், பதிவு உரிமம் பெறாமலும் இருக்கும் மருத்துவமனைகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்படும் என்று அவர்கள் கூறினார்.
மேலும் படிக்க
ஆன்லைன் விளையாட்டை எதிர்ப்பவரா நீங்கள்: தடை செய்ய கருத்து சொல்லுங்கள்!
ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச டியூஷன்: ஆகஸ்ட் 15 முதல் தொடக்கம்!