கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில், 1.45 ஏக்கர் பரப்பளவில் பீமா வகை மூங்கில் (Bamboo) நாற்றுக்களை நட்டு, ஆக்சிஜன் பூங்கா (Oxygen Park) அமைக்கப்பட்டுள்ளது.
பீமா மூங்கில் நடவு:
பீமா மூங்கில், நம் நாட்டில் மிக வேகமாக வளரும் தன்மையுடைய மூங்கில் வகையை சேர்ந்தது. இந்த வகை புல் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடை (CO2) உட்கிரகித்து மண்ணினுள் சேகரித்து வைக்கிறது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் (Tamil Nadu Agricultural University), 1.45 ஏக்கரில், 500 பீமா மூங்கில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகையில், 'ஐந்து ஆண்டுகளில், இந்த மூங்கில் மரங்கள் 20 ஆயிரத்து 650 கிலோ முதல் 86 ஆயிரத்து 140 கிலோ கார்பன்டை ஆக்சைடை உட்கிரகிக்கும். அதிக அளவு ஆக்ஸிஜன் வாயுவை (Oxygen Gas) வெளியிடுவதால் சுற்றுச்சூழல் (Environment) பாதுகாக்கப்படுவதுடன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீங்குகளை குறைக்கிறது. பல்கலையில் பரவலாக இந்த வகை மூங்கில்கள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்' என்றனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, வேளாண் பல்கலைக்கழகத்தில் மூங்கில் மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பது இயற்கை ஆர்வலர்கள் இடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூங்கில் மரக்கன்றுகளால் உருவான இந்த ஆக்ஸிஜன் பூங்கா, மனித இனத்திற்கு நன்மையை மட்டுமே தரக்கூடியது. மாநிலத்தின் அனைத்து கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இத்திட்டம் நிறைவேறினால், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தியது தவறு! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புரெவி புயலால் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: வேளாண் அமைச்சர் தகவல்!