News

Tuesday, 16 March 2021 06:17 PM , by: KJ Staff

Credit : Daily Thandhi

மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூர் பகுதியில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுவடை (Harvest) முடிந்து, நெல் மூட்டைகளை விற்பனை செய்ய நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எடுத்துச் சென்றனர். ஆனால், இன்னமும் கொள்முதல் செய்யப்படாத நிலையில் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். விவசாயிகளின் துயர் துடைக்க, விரைந்து நெல் மூட்டைகளை கொள்முதல் (Purchase) செய்ய வேண்டும்.

நெல் மூட்டைகள்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர், கிள்ளியூர், மாமாகுடி உள்ளிட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் கடந்த 5 நாட்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சம்பா நெல் சாகுபடி (Samba Paddy cultibation) செய்து அறுவடை நேரத்தில் பலத்த கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்து மகசூல் (Yield) பாதிக்கப்பட்டது. இதில் ஓரளவு காப்பாற்றப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால், அங்கு ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கிறது. இதற்கு காரணம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றி செல்வதற்கு சரியாக லாரிகள் வருவதில்லை என நேரடி கொள்முதல் நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அப்படியே வந்தாலும் ஓரிரு லாரிகள் மட்டுமே வருகிறது. நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதற்கு முக்கிய காரணம் லாரிகள் தட்டுப்பாடு (Shortage of trucks) என கூறப்படுகிறது.

விவசாயிகள் கோரிக்கை

ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் (Paddy bundles) தேங்கி கிடக்கின்றன. விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும். எனவே விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை விற்பனை செய்து வாங்கிய கடனை அடைக்கலாம் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
எனவே நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை லாரிகள் (Trucks) மூலம் விரைவில் ஏற்றி செல்ல வேண்டும் என்றும், விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

60 வயதைக் கடந்த மண்பானை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கோரிக்கை!

காளான் வளர்ப்பில் இருமடங்கு இலாபம்! விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த வேளாண் கல்லூரி மாணவர்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)