News

Wednesday, 25 June 2025 08:22 AM , by: Harishanker R P

உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலத்தில் கிராமத்தினர் நடத்திய அரசு நேரடி கொள்முதல் மையத்தில் நெல் வாங்காமல், தி.மு.க., வினருக்கு ஒதுக்கிய மையத்தில் கொள்முதல் செய்வதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 60 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்

இக்கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் நெல் கொள்முதல் மையத்தை கிராம மக்கள் இணைந்து நடத்திவருகின்றனர். இந்த ஆண்டு 10 ஆயிரம் சிப்பங்களுக்கு மேல் மையத்திற்கு வந்த நிலையில் 5 ஆயிரம் சிப்பங்கள் வரை கொள்முதல் செய்தனர். கடந்த வாரத்தில் இங்கு கொள்முதல் மையத்தை நிறுத்தி விட்டு அதே பகுதியில் தி.மு.க., வைச் சேர்ந்தவர்களுக்கு நெல்கொள்முதல் மையம் துவக்க அனுமதி வழங்கி அங்கே கொள்முதல் துவங்கியது.

இதைகண்டித்து கிராம மக்கள் நேற்று காலை மதுரை ---தேனி ரோட்டில் 20 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. 150 பேரை டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கிராமத்தினர் நடத்தும் கொள்முதல் மையத்திலும் நெல் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)