News

Sunday, 21 February 2021 11:42 AM , by: Daisy Rose Mary

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 356 மெட்ரிக். டன் அளவுக்கு நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா். மேலும், நடப்பு பருவத்திற்கும் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இயல்பான மழை பொழிவு

இது தொடர்பாக ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 720.47 மி.மீ. பிப்ரவரி மாதம் முடிய இயல்பு மழை அளவு 7.26 மி.மீ. நடப்பாண்டில் இப்போது வரை 59.74 மி.மீ மழை பெய்துள்ளது. பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தற்போது 95.68 அடியாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 89,020 ஹெக்டோ் பரப்பில் வேளாண் பயிா்களும், 55,324 பரப்பில் தோட்டக் கலைப் பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன

356 மெட்ரிக் டன் விதை நெல் விநியோகம்

நடப்பு ஆண்டில் நெல் விதைகள் 356 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 27 மெட்ரிக் டன், பயறு வகைகள் 30 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 149 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ரசாயன உரங்களான யூரியா 42,416 மெட்ரிக் டன், டி.எ.பி 10,171 மெட்ரிக் டன், பொட்டாஷ் 18,032 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 31,045 மெட்ரிக் டன், கலப்பு உரங்கள் 6,460 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்துக்குத் தேவையான உரங்கள், பிற இடுபொருள்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன

 

மானியம் வழங்கல்

வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 1.63 கோடி, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின்கீழ் ரூ. 170 கோடி, நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் ரூ. 30 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக் கலைத் துறையின் மூலம் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் ரூ. 35.45 கோடி, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் ரூ. 2.55 கோடி, தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 12.52 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2.55 கோடி

கூட்டுப் பண்ணையத் திட்டத்தின்கீழ் நடப்பு ஆண்டில் 51 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ. 2.55 கோடி தொகுப்பு நிதியில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன என்பன உள்ளிட்ட தகவல்கள் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க..

பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.1147 கோடி வழங்கல்!

வாழை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் - தோட்டக்கலைத்துறை அறிவுரை

புதிய வேளாண் சட்டம் விவசாயிகளை பாதுகாப்பதோடு உரிய விலை பெற்றுத் தரும் - நிர்மலா சீதாராமன் பேச்சு!

மகசூல் விளைச்சலை அளவிட ட்ரோன்களை பயன்படுத்தலாம்! - வேளாண்துறைக்கு அனுமதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)