2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது.
2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பத்ம விபூஷண் விருதுகள் 4 பேருக்கும், பத்ம பூஷண் விருதுகள் 14 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் இருந்து 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பங்காரு அடிகளார் – ஆன்மீகம்
- சரத் கமல் விளையாட்டு - டேபிள் டென்னிஸ்
- நார்தகி நட்ராஜ் – கலை
- மதுரை சின்னப்பிள்ளை - சமூகப்பணி
- ஆர் வி ரமணி - மருத்துவம்
- ஆனந்தன் சிவமணி – கலை
- ராமசாமி வெங்கடசுவாமி - மருத்துவம்