பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், பனை விதைகளை, 100 சதவீத மானியத்தில், விவசாயிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் விநியோகிக்க, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பனை விதைகள் (Palm Seeds)
பனை மேம்பாட்டு இயக்கம், 1 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என, வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளை முழு மானியத்தில் (Full Subsidy) விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 1 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் உயரும் (
பனை மர ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் வழியாக, குறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில், திருநெல்வேலி மாவட்டம், கிள்ளிகுளம் பனை ஆராய்ச்சி கூடம் புதுப்பிக்கப்பட உள்ளது.
மானிய விலையில் பனை விதைகளை வழங்குவதன் மூலம், பனை விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர பெரிதும் உதவியாக அமையும். விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய அருகிலுள்ள வேளாண் மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
மேலும் படிக்க
PM Kisan: நாடு முழுவதும் விவசாயிகளுக்கு e-KYC கட்டாயம்!
பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்ய பன்னீர் கரும்புகள் தயார்!