தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள விவசயிகளுக்கு பனை விதைகள் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மாநில மரமாக பனை இருக்கின்றது. பனை மரத்தில இருந்து நுங்கு, கருப்பட்டி, பதனீர், பனம்பழம் உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கின்றன. மேலும், இதில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது, அழிந்து வரும் பட்டியலில் பனை மரம் இருக்கிறது. பனை மரம் நிலத்தடி நீரையும் சேமிக்கும் தன்மை கொண்டது. இயற்கைக்கும் பாதுகாப்பானதாகவும் இருந்து வருகிறது.
பனைமரத்தில் இருந்து பல்வேறு நாடுகளும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த பனை மரம் தமிழகத்தில் அழிந்து வருவது பெரும் வருத்தத்துக்கு உரியதாக இருந்து வருகிறது.
இதன் மூலம் விவசாயிகளுக்கு 25 ஆயிரம் பனை விதைகள் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகபட்சம் 50 பனை விதைகள் 100 சதவீத மானியத்தில் (அதாவது இலவசமாக) வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் மாநில மரமாகவும், நிலத்தடி நீரை அதிகரித்து மண் அரிப்பை தடுத்து, அடி முதல் நுனி வரை பயனளிக்கும் மரமாகவும் விளங்கும் பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவிக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பனை விதைகள் நடவும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் கீழ் 2022-23-ம் நிதி ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தை செயல்படுத்த ரூ.75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: