தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பனை மரங்கள் (Palm Trees) அழிக்கப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தை சேர்ந்த லாடசாமி பனைமரத்தின் மட்டையில் இருந்து எடுக்கப்படும் பனைத்தும்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். தற்போது அவரது மகன்கள் கரிமுகன், கரன் வாசகன் ஆகியோர் இந்த தொழிலை செய்து வருகின்றனர். பனை சார்ந்த தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில், இவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
பனைத்தும்பு தொழில்
பட்டதாரிகளான இவர்கள் மூலம் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு (Job) கிடைத்து வருகிறது. இதுகுறித்து பட்டதாரி இளைஞர்கள் கரிமுகன், கரன் வாசகன் ஆகியோர் கூறுகையில், பருவகாலத்தில் மட்டுமே செய்யக்கூடிய பனைத்தும்பு தயாரிக்கும் தொழில் சாவல்களை கொண்டது. தற்போது பனைமரங்கள் அழிக்கப்பட்ட வருவதால் தும்பு தயாரிக்க தேவைப்படும் பனை மட்டை மத்தைகள் போதிய அளவு கிடைப்பது இல்லை.
முன்னோர்கள் தங்களின் கைகளால் பனைத்தும்பு தயாரித்தனர். தற்போது நாங்கள் எந்திரங்களின் உதவியுடன் இந்த தொழிலை செய்து வருகிறோம். பனைமட்டை பத்தைகளை எந்திரத்தில் நசுக்கி பின்னர் அதை சுத்தம் செய்தால் தும்பு கிடைக்கும். பின்னர் அதை உலர்த்தி தரம் பிரித்து விற்பனை (Sales) செய்து வருகிறோம்.
பனைத்தும்பு தயாரிப்பை குடிசைத்தொழில் முறையில் செய்து வருகிறோம். இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பளிக்கும் இத்தொழில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது. இந்த தொழிலை விரிவுபடுத்தி கிராமங்களில் அதிக பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இராணுவ தளவாடங்களை தூய்மைப்படுத்த இந்த பனைமரத்தின் தும்பு பயன்படுகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் இதை ஏற்றுமதி (Export) செய்து வந்தோம். ஊரடங்கு காலம் என்பதால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றனர்.
மேலும் படிக்க
ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற மரக்கன்றுகளை நடும் இளைஞர்கள்!
300 கிலோ உரத்தை 5 டன் உரப் பயன்பாட்டுக்கு சமமாக மாற்றுவது எப்படி?