1.PAN-Aadhaar linking காலக்கெடு ஜூன் 30 வரை நீடிப்பு
நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை 30 ஜூன் 2023 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. தற்போதைய காலக்கெடு வருவதற்கு சற்று முன்னதாகவே வரி செலுத்துவோருக்கு பான் எண்ணை ஆதாருடன் இணைக்க கூடுதல் கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.நெகிழி இல்லா தருமபுரி- விழிப்புணர்வு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை மற்றும் நெகிழி இல்லா தருமபுரி விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒருபகுதியாக நெகிழி இல்லா தருமபுரி விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
3.சதம் அடித்த வெயில்
தமிழ்நாட்டில் ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்
அதிகபட்சமாக ஈரோட்டில் 103.28 ஃபாரன்ஹீட்டாக பதிவான வெப்பம்
4.வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம் பகுதியில் பயிரிடப்பட்ட வெண்டைக்காய்கள் அறுவடை பணி நடந்து வருகிறது. இதனால் மூட்டை, மூட்டையாக வெண்டைக்காய்களை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனையானது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
5.ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சை மாவட்ட வேளாண் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சை, பாபநாசம் ஒரத்தநாடு, கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் வருகிற 1-ந்தேதி முதல் உளுந்து மற்றும் பச்சைப்பயறு விலை ஆதரவுத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படவுள்ளது. உளுந்து கிலோ ரூ.66 என்ற விகிதத்திலும், பச்சைப்பயறு கிலோ ரூ.77.55 என்ற விகிதத்திலும் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த விவசாயிகள். பயறு வகைகளை ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலம் விற்பனை செய்வதால் நேரிடும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் முனைப்பு இயக்கம் தஞ்சையில் நடத்தப்பட்டது.
6,தங்கம் விலை உயர்வு
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து 5 ஆயிரத்து 545-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
7.நேந்திரன் வாழை விலை சரிந்துள்ளது
திருச்சியை அடுத்த அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதிகளில் நெல், வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நேந்திரன், ஏழரிசி உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் வாழைக்காய்கள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, நேந்திரன் வாழைக்காய் விலை சரிவை சந்திந்துள்ளது. இதனால் உற்பத்தி விலை கூட கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே விலைவீழ்ச்சியில் இருந்து காப்பாற்ற வாழைக்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
8.மா மரங்களில் 10 சதவீதம் கூட விளைச்சல் இருக்காது விவசாயிகள் வேதனை..
தேனி மாவட்டம் போடி மற்றும் பெரியகுளம் பகுதியில் பூச்சி மருந்துகள் தெளித்தும் மா மரங்களில் செல்பூச்சிகள் தாக்கம் அதிகரிப்பு.
பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள மரங்களில்10 சதவீதம் கூட விளைச்சல் இருக்காது என விவசாயிகள் வேதனை.
மேலும் படிக்க
வேதாளமாக மாறிய தங்கம்.. மீண்டும் கிடுகிடுவென விலை ஏறியது !
PAN-Aadhaar linking காலக்கெடு ஜூன் 30 வரை நீடிப்பு, இதோ விவரம்!