பாரா-ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் மனிஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்ராஜ் அதானா வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தினர்.
பாரா-ஒலிம்பிக் (Para-Olympic)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியர்கள் சாதனை (Indians record)
இதில் இன்று காலை பாராஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் மணிஷ் நார்வால் சிங்ராஜ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலேத் தங்களது அசாத்தியத் திறமைகளை வெளிப்படுத்திய இவர்கள், வெற்றிகரமாக தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்று பிற நாட்டு வீரர்களைப் பின்னுக்குத் தள்ளினர்.
கலப்பு பிரிவு (Mixed section)
முன்னதாக கலப்பு பிரிவு பாரா-ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் இந்தியாவின் சிங்ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில், 218.2 புள்ளிகளுடன் மணிஷ் நார்வால் முதல் இடத்திலும், 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்தனர்.
ஏற்கனவே, ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் 216.8 புள்ளிகள் பெற்று சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இதன்மூலம், இந்தியாவின் அவானி லெகாராவைத் தொடர்ந்து, ஒரே பாரா-ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று சிங்ராஜ் அசத்தியுள்ளார்.
பதக்க மழை (Medal rain)
டோக்கியோ பாரா-ஒலிம்பிக் தொடரில், வரலாறு காணாத வகையில் இந்தியா பதக்க மழையைப் பொழிந்து வருகிறது. இதன்படி 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என்று மொத்தம் 15 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
பிரதமர் பாராட்டு (Praise the Prime Minister)
ஒரே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவின் பெருமையை உலக நாடுகளுக்கு மத்திய உயர்த்திப் பிடித்துள்ள இந்திய வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ்: வெள்ளி வென்றார் இந்தியாவின் பவினா!
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல்: வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்!