News

Monday, 31 January 2022 09:00 PM , by: Elavarse Sivakumar

குழந்தைகளுக்கு உணவு அளிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், உணவுக்காகக் குழந்தைகளை விற்கப் பெற்றோர் முன்வந்துள்ளனர்.
தங்களைவிட யாரால் குழந்தைக்குக் கூடுதல் உணவளிக்க முடிகிறதோ அவர்களுக்கு குழந்தைகளை விற்பது என முடிவு செய்துள்ளனர்.

மனிதநேரம் மரணம்

இதுகுறித்து ஐநாவின் உலக உணவுத் திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி கூறியதாவது:-


ஆப்கானிஸ்தானில் மக்கள் உயிருடன் வாழ்வதற்காக தங்களது குழந்தைகளையும், அவர்களின் உடலையும் விற்கும் நிலைமையில் இருக்கின்றனர். ஆப்கானில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் வாடுகின்றனர். எனவே சர்வதேச நாடுகள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.

உணவுத் திட்டம்

ஆப்கானிஸ்தான் கடந்த சில வருடங்களாக வறட்சி, பொருளாதார இழப்பு, கொரோனா பெருந்தொற்று, ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட இழப்புகள் என பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 2.4 கோடி மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் 97 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றுள்ளனர். தாலிபான்களுடன் நடைபெற்ற சண்டையினால் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மிகவும் வறுமையான நாடாகத்தான் இருக்கிறது. அந்நாட்டு மக்கள் குழந்தைகளை விற்க முன்வருகின்றனர். எனவே ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானம் குறைந்து வருகிறது. அது மரணம் அடைந்துவிட்டது என்றே சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களைவிட யாரால் குழந்தைக்குக் கூடுதல் உணவளிக்க முடிகிறதோ அவர்களுக்கு குழந்தைகளை விற்பனை செய்யப் பெற்றோர்கள் காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களுக்கு உலக நாடுகள் உதவி வழங்குவதை விரைவுப்படுத்த வேண்டும். இவ்வாறு டேவிட் பீஸ்லி தெரிவித்தார்.

மேலும் படிக்க...

தடுப்பூசி போடாத நோயாளி-அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை!

குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)