ரயில், பேருந்து போன்றவற்றில், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கோ, ஆகாயத்தில் பறக்கும் விமானத்திலேயே ஒரு உயிர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருக்கிறது. அந்த ஸ்வாரஸ்யச் சம்பவம் வேறெதுவுமில்லை. ஏர் இந்தியா விமானத்தில் எலி புகுந்துவிட்டதால், 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட நேர்ந்தது. இந்த சம்பவம் விமானப் பயணிகளை அதிருப்தியை ஏற்படுத்தியது. விமானத்தில் எலிப் புகுந்ததற்கு, விமான நிறுவன ஊழியர்களின் கவனக் குறைவேக் காரணம் என்ற போதிலும், பயணிகளுக்கு மிகப்பெரிய அசவுகரியத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்திவிட்டது.
வெடிகுண்டு மிரட்டல், தீவிரவாதிகள் எச்சரிக்கை, இன்ஜின் கோளாறு, பயணிக்கு உடல்நலக்குறைவு இப்படி எத்தனையோக் காரணங்களுக்காக விமானம் அவசரமாகத் தரையிறக்கப்படுதல், தாமதமாகப் புறப்படுதல் போன்றவை நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், வேடிக்கையானக் காரணத்திற்காக விமானப் பயணம் தாமதமானதாகக் கேள்விப்படுகிறோம். இந்த சுவாரஸ்யமான சம்பவம், ஜம்முகாஷ்மீரில் நிகழ்ந்தது. டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம், ஜம்மு -காஷ்மீர் இடையே உள்நாட்டு சேவையை வழங்கி வருகிறது. ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து மதியம் 2.15 மணிக்கு ஜம்மு நோக்கி புறப்பட ஒரு விமானம் தயாரானது.
அப்போது விமானத்திற்குள் எலி இருந்துள்ளது கண்டறியப்பட்டது. உடனடியாக எலியை தேடி பிடித்து அப்புறப்படுத்தப்பட்டபின் விமானம் புறப்பட்டது. இதனால் 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.10 மணிக்கு விமானம் புறப்பட்டது. விமானத்திற்குள்
விமானத்திற்குள் எலி எப்படி புகுந்தது என்பது குறித்து விசாரணை நடத்த டி.ஜி.சி.ஏ. எனப்படும் உள்நாட்டுவிமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தங்களது பயணம் 2 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள்.
மேலும் படிக்க...