மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 February, 2022 11:58 AM IST
Sudden hike in gold price! today rate of gold

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில், அதிரடி திருப்பமாக தங்கத்தின் விலையில் உயர்ந்திருக்கிறது, இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை நிலவரம்.

ஒரு நாள் போல் ஒரு நாள் இருப்பதில்லை என்ற பழைய சொலவடையுள்ளது. அந்த வகையில், தங்க விலை ஒரு நாள் குறைந்தால், அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்ந்துவிடுகிறது. இதனால் நகை வாங்கும் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். நேற்று விலைச் சரிவு இருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சென்னையில் இன்று (பிப்ரவரி 3, 2022) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4,536 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,524 ரூபாயாக இருந்தது, குறிப்பிடதக்கது. அதேபோல், நேற்று 36,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் 96 ரூபாய் உயர்ந்து 36,288 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நேற்று 4,890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் (24 கேரட்) தங்கம் இன்று 4,902 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே நேரம், நேற்று 39,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம்(24 கேரட்) தங்கம் 96 ரூபாய் உயர்ந்து 39,216 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.65.90 ஆக இருந்தது, குறிப்பிடதக்கது. இன்று அது ரூ. 65.60 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம், மக்களின் இயல்பு வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாகும். விவசாயிகளும் தங்கம் வைத்து கடன் பெறுவதை எளிதென நம்புகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி சிறு தொழில் முதல் பெருந் தொழில் செய்வோர் வரை அனைவரும் தங்கத்தில் செய்யும் முதலீடு மற்றும் தங்கத்தின் மீது வாங்கும் கடன் அனைத்தையும் எளிது என நம்புகின்றனர். ஆகவே இதன் விற்பனை இன்றளவும் இன்றியமையாதது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வீட்டிலிருந்த படி, தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

மேலும் படிக்க:

கூகுளின் புதிய வடிவமைப்பு, புதிய வடிவத்தில் அறிமுகமாகும் கூகுள், என்னன்ன?

இசையை கேட்டு துங்குபவரா நீங்கள், அப்படியானால், உங்களுக்கான எச்சிரிக்கை இது!

English Summary: Past few days, Gold price was declined, sudden rise in gold price! today rate of gold
Published on: 03 February 2022, 11:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now