அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, வேலுார் முதல் உமையஞ்செட்டிபாளையம் வரை மினி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் டிக்கெட் கட்டணத்துக்கு 'பேடிஎம்' மூலம் பணம் செலுத்தும் முறையை, அதன் உரிமையாளர் ஜோதி அருணாசலம் செயல்படுத்தி உள்ளனர்.
பேடிஎம் (Paytm)
இதுகுறித்து, அவர் கூறுகையில், ''பயணிகளுக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில்லறை தட்டுப்பாட்டால் ஏற்படும் தொல்லைகளுக்கு வாய்ப்பே இல்லை. இதனால், வங்கி கணக்கில் வசூல் தொகையை செலுத்த காத்திருக்கவும் தேவையில்லை,'' என்றார். மினி பஸ்சில் 'பேடிம்' சேவை அறிமுகமானது, பயணிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் கட்டணம் செலுத்துவதால், சில்லரை பிரச்சனை இருக்காது. ஆனால், பேருந்தில் பயணம் செய்யும் அனைவரிடமும் பேடிஎம் அக்கவுன்ட் இருக்குமா? என்பதை உறுதி செய்வது அவசியமாகும்.
மினி பஸ் இயக்கத்தினால், அரசு பேருந்து போக்குவரத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பல மாவட்டங்களில் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த வசதி பயணிகளுக்கு சவுகரியத்தை அளிக்கும். இருப்பினும், ஆன்லைனில் டிக்கெட் கட்டணம் செலுத்த பேருந்தில் வைஃபை வசதி இருந்தால் கூடுதல் அம்சமாக அமையும்.
மேலும் படிக்க
ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக சந்தைக்கு வரும் ஹோண்டா சிபி350 பிரிகேட்!