நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களும் மாநில அரசு ஊழியர்களும் நடைமுறையில் உள்ள புதிய பென்சன் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இத்திட்டம் அமலுக்கு வந்தால் ஊழியர்களுக்கு அதிகப் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசு இந்த விஷயத்தில் அடம் பிடித்து வரும் நிலையில், மாநில அரசுகள் ஒவ்வொன்றாக பழைய பென்சன் திட்டத்தை அறிவித்து வருகின்றன.
முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்சன் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், வாரங்களுக்கு நாட்களுக்கு முன்னர் சத்தீஸ்கர் மாநிலமும் இத்திட்டத்தை அறிவித்தது. இரண்டு மாநிலங்கள் மட்டுமே இப்போது பழைய பென்சன் திட்டத்துக்கு மாறியுள்ள நிலையில், மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக இத்திட்டத்துக்கு மாறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலமும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அம்மாநில சட்டப்பேரவையில் பொதுமக்கள் நலன் தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், பழைய பென்சன் திட்டமும் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது அம்மாநில அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களின் இந்த முடிவைத் தொடர்ந்து மத்திய அரசும் விரைவில் பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் மாநிலங்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சரான பகவத் காரத், அப்படி ஒரு எண்ணமே மத்திய அரசிடம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் இதுவரை மத்திய அரசின் இந்த திட்டத்தில் இணையாமல் இருந்தால் இன்னொரு வாய்ப்பு. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 'பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், நீங்கள் ஆண்டுக்கு ரூ.1,11,000 வரை பென்சன் பெறலாம்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் முதியவர்களை அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் நிதி ரீதியாக தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற உதவுகிறது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இதில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் இணைய அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
இந்தத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்ம் (LIC) செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தில் ஓய்வூதியம் பெற, நீங்கள் ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1000 பென்சன் வாங்க ரூ.1,62,162 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச மாத பென்சன் ரூ.9,250, காலாண்டு பென்சன் ரூ.27,750, அரையாண்டு பென்சன் ரூ.55,500 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,11,000 ஆகும்.
இந்த திட்டத்தில் உங்களுக்கு கடன் வசதியும் உள்ளது. இதில், பாலிசியின் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கடன் பெறலாம். அதிகபட்ச கடன் தொகை கொள்முதல் விலையில் 75 சதவீதத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.
PMAY வந்தனா யோஜனா பற்றிய விவரங்களுக்கு 022-67819281 அல்லது 022-67819290 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். இது தவிர, நீங்கள் 1800-227-717 என்ற கட்டணமில்லா எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க..
தேசிய பென்சன் திட்டம்: புதிய மாற்றங்கள் ஏற்படுத்த பரிந்துரை!