பணி ஓய்வு பெறவுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு சங்கல்ப் திட்டதின் கீழ் ஒரு புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன் படி ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்பும் அவர்களது சேவையை தொடர ஒரு திட்டத்தினை வழி வகுத்துள்ளது.
பணியிலிருந்து ஓய்வு பெறுவது என்பது தினமும் நடந்து கொண்டே உள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு துறையிலிருந்து பல்வேறு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று கொண்ட இருக்கிறார்கள். மத்திய அரசும் அவர்களது பணி ஓய்விற்கு பின்பும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதற்காக ஓய்வூதிய துறை அவர்களது நலன் கருதி 'சங்கல்ப் ' திட்டத்தின் கீழ் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சங்கல்ப் திட்டத்தின் நோக்கம் என்பது பணி ஓய்வு பெற்றவர்களை ஒருங்கிணைத்து அவர்களது திறமை மற்றும் அனுபவம் போன்றவற்றை இந்த சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமாக பயன்படும் படி செய்வதாகும். ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். பணி ஓய்விற்கு பிறகும் அவர்கள் எவ்வித மன உளைச்சலின்றி நிம்மதியாக இருக்கும் படி அமையும் இந்த திட்டம்.
சங்கல்ப் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான துறையில் அவர்களது சேவையினை நாட்டிற்கும், இந்த சமூகத்திற்கும் அளிக்கும் பொருட்டு இந்த திட்டமானது மத்திய அரசால் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையான பயிற்சினையும் வழங்க தீர்மானித்துள்ளது.
மத்திய அரசின் எந்த துறையினை சேர்ந்தவராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணையலாம். இதற்கு தேவையான படிவங்கள்.
- 12 இலக்க ஓய்வூதிய எண், பணிபுரியும் துறை மற்றும் எண்
- பணியின் ரேங்க் மற்றும் ஓய்வு பெறும் நாள், மாதம் மற்றும் ஆண்டு போன்ற விவரங்கள்
- பான் எண், கைப்பேசி, வகிக்கும் பதவி, பணிபுரியம் துறை, வயதிற்கான சான்றிதழ் நகல்கள்.
இதற்கான விண்ணப்பங்கள் /https://pensionersportal.gov.in/Sankalp/ என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சரிபார்த்தல் முடிந்த பின்பு ஒரு அடையாள எண் மற்றும் அதற்கான ரகசிய வார்த்தையும் அனுப்ப படும்.
இவ்விரண்டினை வைத்து தேவைப்படும் போது இணையதளத்தில் இருந்து தகவல்களை பார்த்துக் கொள்ளலாம்.