சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பெட்டி கடைகள், மளிகை கடைகள் போன்ற சிறு கடைகளும் மழை பாதிப்பால் திறக்கப்படாமல் இருக்கிறது.
டாஸ்மாக் மது கடைகளும் 40 இடங்களில் மூடப்பட்டுள்ளன. கிண்டி, அடையாறு, தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதோடு கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால் மதுக்கடைகளை திறக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் இயங்கவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
மேலும் மது விற்பனையும் சரிவில் உள்ளது. மழையால் வருமானம் குறைந்ததால் மது பிரியர்கள் குடிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மது விற்பனை 50 சதவீதத்திற்கும் குறைவாகவே விற்கப்பட்டுள்ளது. கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மது விற்பனை மிகவும் மோசமான அளவில் இருந்ததாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: