குணம், நடத்தை, சிறப்பு மற்றும் திறன் அடிப்படையில் தங்கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், மற்ற எதையும் கருத்தில் கொள்ளக் கூடாது எனவும் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
தெலங்கானா முன்னாள் தலைமை செயலாளர் திரு எஸ்.கே.ஜோஷி எழுதிய மக்கள் மைய ஆட்சி என்ற என்ற புத்தகத்தின் தெலுங்கு மொழி பெயர்ப்பான சுபரிபலனா’ என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத்தலைவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதற்கு குணம், நடத்தை, சிறப்பு, திறன் என்ற நான்கு விஷயங்கள் அவசியமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த நான்கு விஷயங்களையும் சாதி, சமூகம், பணம், குற்றம் ஆகிய நான்கு விஷயங்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றன என்றார். மக்களை மையமாகக் கொண்ட ஆட்சி நிர்வாகம், நிர்வாகத்தை மையமாக கொண்ட வாக்காளரிடம் இருந்துதான் வரும் என்று அவர் நினைவுபடுத்தினார்.
மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கும், பல திட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கும் நல்ல நிர்வாகம் அவசியமானது என குடியரசுத் துணைத்தலைவர் கூறினார். சிறந்த நிர்வாகத்துடன்தான் மகிழ்ச்சியும் வருகிறது என அவர் மேலும் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள், மக்களின் நம்பிக்கையை வைத்திருப்பவர்கள் என கூறிய திரு வெங்கையா நாயுடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும், மக்களுக்கு மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மக்களின் வாழ்க்கையை எளிதாக்க, அரசின் முயற்சிகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தப் புத்தகம் வெளிவந்ததற்காக, இதை எழுதிய டாக்டர் சைலேந்திர ஜோஷி, மொழி பெயர்ப்பாளர் திரு அன்னவரபு பிரம்மையா, வெளியீட்டாளர் திரு மாருதி ஆகியோரை திரு.வெங்கையா நாயுடு பாராட்டினார்.