News

Thursday, 26 May 2022 11:33 AM , by: R. Balakrishnan

Driving Two-wheeler

18 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டினால், 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருசக்கர வாகனம் (Two wheeler)

காரைக்கால்‌ வாழ்‌ பொதுமக்களுக்கு காரைக்கால்‌ மாவட்ட காவல்துறையின்‌ மூலம்‌ தெரிவிப்பது யாதெனில்‌ 18 வயது பூர்த்தி அடையாத தங்களின்‌ பிள்ளைகளிடம்‌ இரு சக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிப்பதோ அல்லது மீறி வாகனத்தை ஓட்டி அதன்‌ மூலம்‌ விபத்து ஏற்படுத்துவதோ குற்றமாகும்‌.

மேற்படி குற்றத்திற்கு அந்த பிள்ளைகள்‌ பெயரிலும்‌ மற்றும்‌ அவர்களின்‌ பெற்றோர்களின்‌ பெயரிலும்‌ மோட்டார்‌ வாகன சட்டம்‌ – 2035, பிரிவு 399 A- ன்‌ படி வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌.

இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள்‌ வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும்‌ 20,00 ரூபாய்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌. எனவே பொதுமக்களாகிய அனைவரும்‌ இதை கருத்தில்‌ கொண்டு யாரும்‌ தங்களுடைய 18 வயது பூர்த்தி அடையாத பிள்ளைகளிடம்‌ எவ்வித வாகனமும்‌ ஓட்ட அனுமதிக்ககூடாது.

மேலும்‌ அதை மீறி அவர்கள்‌ வாகனத்தை ஓட்டாமல்‌ இருக்க கண்காணித்து காரை மாவட்டத்தை விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள்‌ காவல்துறைக்கு தக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என காரைக்கால்‌ காவல்துறை முதுநிலை காவல்‌ கண்காணிப்பாளர்‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

இலட்ச ரூபாய்க்கு ஓட்டை குடையா? இணையத்தில் வைரல்!

முதல்வர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)