People's Grievance Camp in Chennai on behalf of the government!
பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தியை விளக்குகிறது இப்பதிவு.
செய்திகுறிப்பின்படி, செப்டம்பர் - 2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 10.09.2022 அன்று காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
- குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல்,
- பெயர் நீக்கம்,
- முகவரி மாற்றம்,
- கைபேசி எண் பதிவு/மாற்றம் செய்தல்
- புதிய குடும்ப அட்டை/நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல்
ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக்கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு ஆங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மேலும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், சென்னையிலுள்ள 19 மண்டல ஆலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்தச் சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்செய்தி உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க:
Hotel Management: தாட்கோ மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு! விவரம் உள்ளே
TNPSC Group IV: எழுத்துத் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி! விவரம் உள்ளே