நிபுணர் குழு பரிந்துரையின் படி, வண்டலுார் உயிரியல் பூங்காவில், வெளிநாட்டு வகை மரங்களை நடலாம்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சூழலியலையும், விலங்குகளையும் பாதிக்கும் என்பதால், வண்டலுார் உயிரியல் பூங்காவில் நடப்பட்டுள்ள வெளிநாட்டு வகை செடி, மரங்களை அகற்ற வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த எம்.பாரதிராஜா, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வெளிநாட்டு மரங்கள் வளர்ப்பு (Grow Forign Trees)
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: காடுகளின் சூழலியலுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது கண்டறியப்பட்டால், வண்டலுார் உயிரியல் பூங்காவில் நடப்பட்டுள்ள வெளிநாட்டு வகை செடிகள், மரங்களை அகற்றலாம்.
அதற்கு பதிலாக உள்ளூர் வகை மரங்களை நடலாம். உயிரியல் பூங்காவில் உள்ள வெளிநாட்டு விலங்குகள், நல்ல சூழலில் வளர்வதற்கு வெளிநாட்டு வகை செடிகள், மரங்கள் தேவையெனில் நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி நடலாம்.
வெளிநாட்டு வகை மரங்கள் நடுவது தொடர்பாக, வனம், சுற்றுச்சூழல் துறை விதிகளின் படியும், நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் படியும் உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
காயர் பொருட்களை பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்: ஐ.நா. ஆலோசகர் தகவல்!
மழைக்காலத்தில் உதவிய மாடுகளுக்கு நன்றிக்கடன் செலுத்திய பொதுமக்கள்!