குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. எனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுவதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரடமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குமரியின் குற்றாலம் எனப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து விழுகிறது.
நேற்று காலை நிலவரபடி அனைத்து அணைகளும் சேர்த்து 6 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெரிஞ்சாணி அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து நேற்று 1000 கனஅடி தண்ணீர் உபரியாக திறக்கப்பட்டது தற்போது நீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளதால் 2500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது . பெரிஞ்சாணியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோல் பேச்சிப்பாறை அணையும் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பிடிக்க..
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம் தகவல்!
காய்கறி பழங்களை ஏற்றிச்செல்லும் "கிசான் சரக்கு ரயில்" - விவசாயிகளுக்கு 50 % மானியம்
மீன் வளர்ப்புக்கு 40% மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!