நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் விலை, வெற்றிகரமாக தற்போது 100 ரூபாயை எட்டியுள்ளது. இதனால் நடுத்தர வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விலை நிர்ணயம் (Price Fixing)
சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஏறுமுகத்தில் விலை (Price on the rise)
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர் ஏற்றம் கண்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சதம் அடித்தது (Scored a hundred)
பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. டீசல் விலையும் ராஜஸ்தானில் ரூ.100- ஐ தாண்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் மோட்டார் சைக்கிள், கார் உள்பட வாகனங்கள் வைத்திருக்கும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் விலை ரூ.102.50 (Petrol price is Rs.102.50)
இந்நிலையில் கொடைக்கானலில் பிரிமீயம் ரக பெட்ரோல் விலை ரூ.102.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 1 லிட்டர் டீசல் ரூ.93.70-க்கு விற்பனையாகிறது. இந்த விலைஉயர்வு, வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வு இல்லை (No price increase)
முன்னதாக தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிவு வந்த பின் படிப்படியாக உயர்த்தப்பட்டு இந்தியாவின் பல நகரங்களில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகிறது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரூ.98-ஐ நெருங்கி பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயரும் அபாயம் (Risk of rising prices)
எரிபொருள் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிர்ணயிக்கும் சக்தி (Determining power)
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையே அரிசி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது.
கூடுதல் நிதிச்சுமை (Additional financial burden)
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை கொடைக்கானலில் தற்போது ரூ.100-ஐ தாண்டி விற்கப்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் மேலும் நிதிச்சுமையைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் அதிருப்தித் தெரிவித்தனர்.
மக்களிடையே அச்சம் (Fear among the people)
அண்மையில் சதத்தை எட்டியிருந்த நிலையில், தற்போது 100ரூபாயைத் தாண்டிவிட்டதால், இனி வரும் நாட்களில் பெட்ரோலுக்கென அதிக செலவு செய்ய நேருமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
உரங்கள் இருப்பு நிலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு!
கன்றுக்குட்டிகளை விற்று கொரோனா நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி!