News

Tuesday, 09 May 2023 07:59 AM , by: R. Balakrishnan

PF higher Pension

EPFO பென்சன் தொகையை உயர்த்திக்கொள்வதற்கு தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் EPFO அனுமதி அளித்துள்ளது. இதற்கான கடைசி தேதி ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், விண்ணப்பதாரர்களுக்கு புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

PF அதிக பென்சன்

தகுதியுள்ள EPFO பயனாளிகள் அதிக பங்களிப்பு தொகை மூலம் பென்சன் தொகையை உயர்த்திக்கொள்ள அனுமதித்து கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது EPFO பென்சன் பயனாளிகளுக்கு பெரும் நிவாரணமாக அமைந்தது.

EPFO பயனாளிகள் அதிக பென்சனுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 3ஆம் தேதியாக இருந்தது. பின்னர் பல தரப்புகளிடம் இருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கடைசி தேதியை வரும் ஜூன் 26ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது EPFO நிறுவனம்.

EPFO அதிக பென்சனுக்கான விண்ணப்பங்களில் தவறுகள் இருந்தால் அதை திருத்தி கொள்வதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் வலியுறுத்தி வந்தனர். இதற்கு ஏற்ப அண்மையில் EPFO புதிய வசதியை அறிமுகப்படுத்தியது.

புதிய வசதி

EPFO அதிக பென்சன் பெற விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை நீக்குவதற்கு 'Delete' பட்டன் EPFO இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி Delete பட்டனை பயன்படுத்தி விண்ணப்பத்தை நீக்கிவிட்டு, தவறுகளை திருத்தி புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம்.

மேலும் படிக்க

7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு திட்டம்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

பழைய பென்சன் திட்டம் வேண்டுமா? உடனே இதைச் செய்யுங்கள்: மாநில அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)