கொரோனா நெருக்கடியால் பொருளாதார ரீதியால் பாதிக்கப்பட்டுள்ள பி.எஃப் சந்தாதரர்களின் தீபாவளி செலவுக்கு கைகொடுக்க முன்வந்துள்ளது Employee Provident Fund Organization (EPFO).
2019-20 நிதியாண்டிற்கான வட்டியை, பிஎஃப் சந்தாதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. இந்த நிதியாண்டுக்கான வட்டி வீதம் 8.5 %மாக வழங்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்த வட்டித்தொகை இரண்டு தவணைளாக செலுத்தப்படுகிறது. முதலாவது தவணையாக 8.15% வட்டித்தொகை தீபாவளிக்கு முன்பாக அதாவது நவம்பர் 14ம் தேதிக்கு முன்னதாக செலுத்தப்படும்.
எஞ்சிய 0.35% டிசம்பர் 31ம்தேதிக்குள், சந்தாதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு இலவசப் பயிர் காப்பீடு-அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு!
செல்போன் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க வந்துவிட்டது மாட்டுச் சாண Chip!