Pitru Dosham
மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆவூர். இங்கிருக்கும் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவபெருமான், பசுபதீஸ்வரர் என்ற பெயருடனும், அம்பாள் பங்கஜவல்லி என்ற நாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு, பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடமாக இந்த திருத்தலம் பெயர்பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்த ஊருக்கு ஆவூர் என்று பெயர் வந்ததாக சொல்லப்டுகிறது.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இங்கிருக்கும் பஞ்ச பைரவ மூர்த்திகள் சிலையாகும். இந்த 5 பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.
இந்த பஞ்ச பைரவ மூர்த்திகளை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால், அனைத்து துன்பங்களும் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். பஞ்ச பைரவ வழிபாடு என்பது, பிதுர் தோஷம் (இறந்து போன நமது முன்னோகளின் சாபம்) நிவர்த்திக்கு சிறந்ததொரு வழிபாடு என்பர். அதாவது, தந்தை மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர்.
பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், இங்கிருக்கும் பைரவரை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. அத்துடன், சிலர் அதிக சம்பாதனை பெறவும் இங்கே வழிபாடு நடத்தலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
கடன் சுமை தீரவும், நல்ல வேலை வாய்ப்புகள் அமையாவும், வாழ்வில் அமைதி பெறுவதற்கும், பிதுர் தோஷம் நீங்கி வாழ்வில் மேம்பாடு அடைய இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டுது நல்பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க: