தெலுங்கானா விவசாகிகள் மேலும் புதிய வகை விதைகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கி உள்ளது தெலுங்கானா வேளாண் பல்கலைகழகம். பேராசிரியர் ஜெய்சங்கர் வேளாண் பல்கலைகழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் 8 உயர்தரமான விதைகளை உருவாக்கி உள்ளனர். இதில் 3 நெல் விதைகளாகும் என்பது குறிப்பிட தக்கது.
ஒவ்வொரு விதைகளை பல்வேறு தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரத்தினை உறுதி செய்தது. 30-50 வரையிலான தர பரிசோதனை செய்து, பின்பு மாநில வேளாண்துறை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என கூறினார்.
8 வகையான விதைகளில் 3 நெல் விதைகள் , மற்றவை ராகி, கம்பு, வேர்க்கடலை, ஜாவ்வ்ர் போன்றவை ஆகும். இதற்கு முன்பு இந்த பல்கலைகழகம் 17 வகையான விதைகளை உருவாக்கி உள்ளது. அதில் 8 வகைகள் நெல் விதைகளாகும்.
விரைவில் அரசின் தர சான்றிதல் பெற்று விவசாகிகளுக்கு விநியோகிக்க தயாராகி வருகிறது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.
பொதுவாக விவசாகிகளுக்கு விநியோகிக்கும் விதைகள் 98% தரத்துடன் இருத்தல் அவசியமாகும். தற்போது உருவாக்கி உள்ள விதைகள் 95% தரத்துடன் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவியுடன் மேலும் இரண்டு விதைகளை உருவாக்கி உள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு வேண்டி காத்திருக்கிறது. விரைவில் மேலும் புதிய விதைகள் வர உள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran