மாநிலத்தில், 2030 ஆம் ஆண்டுக்குள், 261 கோடி மரக்கன்று நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, வனத்துறை அமைச்சர் கூறினார். மரக்கன்றுகள் நடுவதைக் காட்டிலும், நட்ட பிறகு அதனைப் பராமரிப்பதே முக்கியம். அதற்கான, பணிகளையும் முறையாக செய்ய வேண்டியது அவசியம்.
மரக்கன்று (Saplings)
நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், கல்லுாரி கனவு திட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: நம் மாநிலத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த, முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு சென்று சில பள்ளிகளை பார்வையிட்டார். இனி, அரசு பள்ளியில் இடம் கிடைக்கவில்லை என்ற சூழல் ஏற்படும். குன்னுாரில் விரைவில் அரசு கல்லுாரி அமைக்க பணிகள் நடந்து வருகின்றன. மாநிலத்தில் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2030 ஆம் ஆண்டுக்குள், 261 கோடி மரக்கன்று நடவு செய்யப்பட இருப்பதால் அனைத்து அரசு துறையினரும், மாணவர்களும், மக்களுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் பேசினார்
தொடர்ந்து, துறை வல்லுனர்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு எதிர்கால கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலெக்டர் அம்ரித், முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு நவீன கருவி: கோவை இரயில் நிலையத்தில் அறிமுகம்!