பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமை ஆக்கல் திட்டத்தின் சார்பில், நெய்வேலி வன விரிவாக்கமையத்தின் மூலம், வேப்பூர் பகுதியில் விவசாயிகளின் வயல்களில் 1 லட்சம் தேக்குமர கன்றுகள் (Teak saplings) நடும் திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
அலையாத்திக் காடுகள்:
கடலுார் மாவட்டத்தில், சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் பகுதியில் 3,500 ஏக்கர் பரப்பில் சுரபுண்ணை தாவரங்கள், மூலிகை தாவரங்கள் (Herbal plants) அடங்கிய அலையாத்திக் காடுகள் உள்ளன.கடலுார் மற்றும் விருத்தாசலம் வனச்சரக பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் வனப் பகுதி உட்பட 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதி அமைந்துள்ளது. இதில், விருத்தாசலம் வனச்சரக பகுதியில் உள்ள காப்பு காடுகளில் புங்கன், கூர் மருது, நாவல், மா உள்ளிட்ட அனைத்து வகை மரங்களும் உள்ளன. இங்கு மான், குரங்கு, எறும்பு திண்ணி, காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள், மயில் உள்ளிட்ட பல வகை பறவைகள் (Birds) வசிக்கின்றன.
தேக்கு மரக்கன்றுகள் நடும் திட்டம்:
மாவட்டம் முழுவதும் வனப் பகுதியை விரிவாக்கம் செய்ய, தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் (Tamil Nadu Biodiversity) மற்றும் பசுமை ஆக்கல் திட்டத்தின் (Greening Project) சார்பில், நெய்வேலி வன விரிவாக்க மையத்தின் மூலம், விவசாயிகளின் வயல்களில் 1 லட்சம் தேக்கு மரக்கன்றுகள் நடும் திட்டம் வேப்பூர் தாலுகா பகுதிகளில் துவக்கி, தீவிரமாக நடந்து வருகிறது.வேப்பூர் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளின் வயல்வெளிப் பகுதியில் இது வரை 90 சதவீத தேக்குமரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன.
விரைவில் இப்பணி முடியும் தருவாயில் உள்ளது.பசுமை போர்வை திட்டத்தின் சார்பில், கடலுார் வன சரகத்தின் மூலம் சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளில், 7,500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. குடிகாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வேம்பு, நாவல், இலுப்பை, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் வனசரகர் அப்துல் ஹமீது (Abdul Hameed) தலைமையில் நடப்பட்டுள்ளன.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
இளம் வழக்கறிஞர்களுக்கு 3000 ரூபாய் உதவித்தொகை! தமிழக அரசின் புதியத் திட்டம்!
27,500 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி! தூத்துக்குடி துறைமுகம் வந்தது!