பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக சேகரித்து, 'பிளாஸ்டிக் தார் ரோடு' போடுவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டு இருப்பதாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறினார். பத்திரிகையாளர்களிடம் அவர் கூறுகையில், நெகிழி இல்லாத கோவையை உருவாக்க மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
மீண்டும் மஞ்சப்பை (Again Yellow Bag)
முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், கடைக்காரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வினியோகிக்கிறோம். பொதுமக்கள் எங்கே சென்றாலும், 'மஞ்சள் பை' எடுத்துச் சென்று, பொருட்கள் வாங்க வேண்டும். 'நெகிழி இல்லாத கோவை' உருவாக்க, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே குப்பையை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்; 50 சதவீதம் வெற்றி அடைந்திருக்கிறது. இன்னும், 50 சதவீதம் வெற்றியடைந்தால் மட்டுமே உருவாகும் இடத்திலேயே பிரித்து வாங்க முடியும்.
பிளாஸ்டிக் சாலை (Plastic road)
பிளாஸ்டிக் குப்பையை தனியாக சேகரித்து, இயந்திரங்களை பயன்படுத்தி, துண்டு துண்டுகளாக நறுக்கி, மாற்று உபயோகத்துக்கு பயன்படுத்தலாம். சிமென்ட் ஆலைகளுக்கு தற்போது வழங்குகிறோம். தார் ரோடுகளுக்கு பயன்படுத்தினால், அதன் தரம் இன்னும் கூடுகிறது. பிளாஸ்டிக் தார் ரோடு போடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று, கமிஷனர் பிரதாப் கூறினார்.
மேலும் படிக்க
நெடுஞ்சாலைத் துறையினர் கிணற்றை மூட வந்ததால், விவசாயி தற்கொலை முயற்சி!