News

Saturday, 15 January 2022 04:20 PM , by: Deiva Bindhiya

Players who illegally fielded in Jallikattu, bull attack on its owner!

திருச்சி அருகே இருக்கும் சூரியூர் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளை மாடு முட்டியதில் 29 வயது காளை உரிமையாளர் உயிரிழந்தார். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜி மீனாட்சி சுந்தரம் என்பவர் தனது காளையை வாடிவாசல் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​அந்த வழியாக காளைகள் அரங்குக்குள் நுழையும் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

“காளைக்கு மருத்துவப் பரிசோதனை முடிந்து மீனாட்சி சுந்தரம் அதை அரங்குக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். காளை திடீரென உரிமையாளரைத் தாக்கியது, அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீனாட்சி சுந்தரம் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (எம்ஜிஎம்ஜிஎச்) கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதிக ரத்தப்போக்குதான் மரணத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிகழ்விற்காக சுமார் 400 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன, ஆனால் கோவிட்-19 கட்டுப்பாடுகளின்படி 300 காளை உரிமையாளர்கள் மட்டுமே அரங்கிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். காளைகளை அடக்குபவர்கள் தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் எதிர்மறை RT-PCR அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. கால்நடை பராமரிப்புத் துறையினர் காளைகளின் உடல்நிலையை பரிசோதித்து, அவற்றை அரங்கிற்கு அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து, மதுரை அருகே பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சீறி பாயும் காளைகள், அதை பிடிக்க தம் கட்டும் மாடு பிடி வீரர்கள் என களமே போர்களமாக மாறி உள்ளது. இந்நிலையில் 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் வெவ்வெறு நிற சீருடை அணிந்து களமிறங்குகின்றனர். இந்நிலையில். முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிகட்டில் மாடுபிடி வீரர்கள் முறைகேடு செய்துள்ளனர். ராமச்சந்திரன் என்பவர் 8 காளைகளை பிடித்து 2 வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் இவர் சக்கரவர்த்தி என்பவரின் பெயரில் வாங்கிய சீருடையை அணிந்து மோசடி செய்துள்ளதாக, வருவாய்த் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவரைத் தொடர்ந்து, 3வது இடத்தில் இருந்த தமிழரசனும் முறைகேடு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

குடியரசு தின கொண்டாட்டத்தில் மாற்றம், புதிய ஏற்பாடு. காரணம் என்ன?

ஜல்லிக்கட்டு: காளை பிடிபட்டதால் விரக்தி, காளையுடன் வெளியேறிய இளம்பெண்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)