ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இல்லாமல், முன்னதாக, ஜூன் 27ம் தேதி அதாவது நாளை பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, ஜூலை 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததையடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டன. அதேபோல் இந்த ஆண்டு, புதிய முயற்சியாக, 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்பட்டன.
8.30 லட்சம் பேர்
இதைத் தொடர்ந்து, பிளஸ் 1 எனப்படும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முடிவுகளை முன்கூட்டியே வெளியிட தேர்வுத்துறை முன்வந்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ந் தேதி முடிவடைந்தது.
முன்கூட்டியே
சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இயக்ககத்தின் அதிகரபூர்வ இணையதளங்களில் காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நல்லெண்ணெய் விலை கிடு கிடு ஏற்றம் - ஒரே வாரத்தில் ரூ.166 உயர்வு!