News

Friday, 19 April 2019 07:56 PM

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழக கல்வி துறை இன்று காலை 09:30 மணியளவில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தொடங்கி 19 ஆம் வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. பாண்டிச்சேரிக்கு என்று தனி கல்வித்துறை இல்லாத காரணத்தால் அங்கும் தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்ற படுகிறது. அதனால் இங்கு தேர்வு முடிவுகள் வெளியாகிய பின்னர், பாண்டிச்சேரியில் காலை 11 மணியளவில் தேர்வு முடிவினை இணையத்தளத்தில் வெளியானது.
தமிழகத்தில் மொத்தம் 8,60 ,423 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்ச்சி விழுக்காடு 91 .3 % . மாணவியர்கள் 93 .64 %, மாணவர்கள் 88.57 % பேர் தேர்ச்சி அடைத்துள்ளனர். மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அவர்களது தொலைபேசி எண்ணிற்கு அனுப்ப பட்டுள்ளது. தமிழகத்தில், திருப்பூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் உள்ளது. 95% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதிப்பெண் சான்றிதழ், மறு கூட்டல் மற்றும் கட்டணம்

மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வரும் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அவர்கள் பயின்ற பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வேண்டுவோர், வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in இந்த என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் வேண்டுவோர் ஏப்ரல் 22 ஆம் முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பித்தது பெற்றுக்கொள்ளலாம். மறுகூட்டல் வேண்டி விண்ணப்பிப்போர் ஏப்ரல் 22 ஆம் முதல் 24 ஆம் தேதி முதல் விண்ணப்பத்தி கொள்ளலாம். இதற்கான கட்டணம் 275 /- என் அரசு நிர்ணயித்து உள்ளது. உயிரியல் பட பிரிவிற்கு மட்டும் 305 / என் அறிவித்துள்ளது.
பாண்டிச்சேரியிலும் மற்றும் காரைக்காலிலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பாண்டிச்சேரியின் தேர்வு விழுக்காடு 92 .64% என்பதாகும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 5.62% விழுக்காடு அதிகரித்துள்ளது. காரைக்காலிலும் 84.14% பேர் தேர்ச்சி அடைத்துள்ளனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)