கொரோனா ஊரடங்கு காலத்தில்,ஏழைகள் பசியால் வாடக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு, ரேஷனில், ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்கள், நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல், நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இது குறித்து செவ்வாய்கிழமை பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா ஊரடங்கால் ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க ஏதுவாக, தமது அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து நரேந்திர மோடி பட்டியலிட்டார்.
5 மாதங்களுக்கு நீட்டிப்பு
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் (Prathan Manthri Garib Kalyan Yojana) கீழ் 1.75 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுவதாக பிரதமர் மோடி கூறினார். கடந்த 3 மாதங்களில், 20 கோடி ஏழைக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 31,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 18,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறப்பிட்டார். பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் அனைத்து பண்டிகைகளையும் மனதில் கொண்டு, 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, மற்றும் மாதத்திற்கு 1 கிலோ பருப்பு வழங்கும் திட்டம், தீபாவளி மற்றும் சாத் பூஜை வரை அல்லது நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படும்.” என்றும் அறிவித்தார்.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PMGKAY)
-
இது உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாகும்.
-
மத்திய அரசின் உணவு பாதுகாப்புத் திட்டம் 2013ன்படி பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் , ஊரடங்கால் எந்த ஒரு குடும்பமும் பசியால் வாடக்கூடாது என்பதை உறுதி செய்கிறது.
-
இதன்மூலம் நாட்டில் எந்த ஒருவரும், குறிப்பாக எந்த ஏழை குடும்பமும், உணவுப் பொருள்கள் கிடைக்காமல் வாடுவதற்கு இந்திய அரசு அனுமதிக்காது.
Image credit by : The Hindu
ஒரு தேசம் ஒரு ரேஷன் (One Nation One Ration)
ஏழைக்குடும்பங்களுக்குப் போதுமான புரதச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அந்தந்த பகுதியினரின் விருப்பத்திற்கு ஏற்ற பருப்புகள் அடுத்த 5 மாதங்களுக்கு, வழங்கப்படும். இதற்காக 90 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு கூடதலாகச் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு தேசம் ஒரு ரேஷன் திட்டம் மூலம் இந்த பொது விநியோகத்தை, எந்த விதக் குளறுபடிகளும் இன்றி சிறப்பாக, செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்த முயற்சி நிறைவேறினால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களைப் பெறுவதில் சிக்கல் ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Elavarase Sivakumar
Krishi Jagran
மேலும் படிக்க...
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!!
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!!