உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization) உருவாக்கப்பட்டதன், 75ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு 75 ரூபாய் நாணயத்தை (75 Rupees Coin) பிரதமர் மோடி (Prime Minister Modi) வெளியிட்டார். மேலும், சமீபத்தில் உருவாக்கப்பட்ட, உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின், 17 ரகங்களையும் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
உலக உணவு அமைப்பிற்கு நோபல் பரிசு:
இதன்பின்னர் மோடி பேசுகையில், உலக உணவு அமைப்பிற்கு நோபல் பரிசு (Nobel Prize) வழங்கப்பட்டது, மிகப்பெரிய சாதனை ஆகும். அந்த அமைப்பிற்கு, இந்தியாவின் பங்களிப்புக்காக நாடு மகிழ்ச்சி அடைகிறது. அந்த அமைப்புடன் உறவு வரலாற்று ரீதியிலானது.
100 ரூபாய் நாணயம்:
கடந்த திங்கட்கிழமை அக்டோபர் 12 அன்று, பா.ஜ., கட்சியின் (BJP) முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய, தலைவர்களில் ஒருவரான விஜயராஜே (Vijayaraja) நினைவாக ரூ.100 நாணயத்தை (100 Rupees Coin), மோடி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
உலக உணவு தினம்:
உலக உணவு தினமான (World Food Day) இன்று, உணவை வீணாக்காமல் இருக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். உணவை உற்பத்தி செய்ய காரணமாக இருக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்ற மதிப்பை அனைவரும் வழங்க வேண்டும். உணவை வீணடிக்காமல் இருந்தால், பல பேரின் பசியை நீக்க முடியும். ஆதலால், உணவு தினத்திலிருந்து இனியாவது, யாரும் உணவை வீணடிக்கக் கூடாது.
மேலும் படிக்க
கடலூரில் வேளாண் துறை சார்பில் பெண் விவசாயிகள் தின விழா!
சரியான உணவை உண்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார், நெல்லை மாவட்ட ஆட்சியர்!