News

Tuesday, 28 February 2023 08:57 AM , by: R. Balakrishnan

PM Kisan

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் பதிவுசெய்திருந்த கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஹோலி பண்டிகைக்கு முன் ஹோலி பரிசை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13ஆவது தவணையான ரூ.16,000 கோடியை கர்நாடக மாநிலம் பெலகாவியில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிஎம் கிசான் (PM Kisan)

பிஎம் கிசான் பணம் உங்களுக்கு வந்துள்ளதா இல்லையா என்பதை உங்கள் வங்கிக் கணக்கில் சரிபார்க்கவும். நீங்கள் தகுதியான விவசாயியாக இருந்தும், பிஎம் கிசான் திட்டத்தின் பணம் 2000 ரூபாயை இன்னும் பெறவில்லை என்றால் உடனடியாக இதைச் செய்ய வேண்டும்.

முதலில், பிஎம் கிசான் திட்டத்தின் நிதியுதவி உங்களுக்கு கிடைக்குமா என்பதை அறிய PM Kisan அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்கள் பெயரைச் சரிபார்க்கலாம். farmers corner வசதியை கிளிக் செய்வதன் மூலம் பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்க்கலாம். இ-கேஒய்சி மற்றும் நில விவரங்கள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். ஆதார் விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களையும் சரிபார்க்கவும்.

ஹெல்ப் லைன்

அனைத்து விவரங்களும் சரியாக இருந்தும், பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13வது தவணை தொகை இன்னும் உங்கள் கணக்கில் வரவில்லை என்றால், உடனடியாக விவசாய அமைச்சகத்தை தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனையை தெரிவிக்கலாம். விவசாயிகள் புகார் கொடுப்பதற்கு டோல் ஃபிரீ நம்பர்கள் உள்ளன. கீழ்க்காணும் எண்களில் விவசாயிகள் புகார் கொடுக்கலாம்.

  • டோல் ஃபிரீ நம்பர்: 18001155266
  • ஹெல்ப்லைன் நம்பர்: 155261
  • லேண்ட் லைன் நம்பர்கள்: 011—23381092, 23382401
  • பிஎம் கிசான் நியூ ஹெல்ப்லைன்: 011-24300606
  • ஹெல்ப்லைன்: 0120-6025109

மேலும் படிக்க

PF கூடுதல் பென்சன் பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு!

பென்சன் வாங்குவோர் கவனத்திற்கு: ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)