மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 March, 2021 11:39 AM IST

விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்ப்பாக்கும் பிஎம் கிசான் திட்டத்தின் 8வது தவணை அடுத்த வாரத்தில் விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது வரை பி.எம் கிசான் நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்காத விவசாயிகள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்தாள் அவர்களுக்கு ரூ.4000 கிடைக்கும்....

பி.எம் கிசான் திட்டம் 

பி. எம் கிசான் நிதி திட்டம் என்பது  மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்திற்குத் தகுதியான விவசாய குடும்பங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் கண்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் வரவு வைக்கப்படுகிறது. 

3 தவணைகளில் பணம் வரவு 

முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையும் மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. 

8 வது தவணை எப்போது?

இதுவரை 7 தவணைகள் விடுவிக்கப்பட நிலையில் 8-வது தவணை அடுத்த வாரம் விடுக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மார்ச் 31க்குள் விண்ணப்பித்தாள் ரூ.4000 கிடைக்கும்

இதுவரை பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்யாதவர்கள், இந்த மாத இறுதிக்குள் இத்திட்டத்தில் தங்களை பதிவு செய்துக்கொண்டால் அவர்களுக்கு இரண்டு தவணைகள் அதாவது ரூ.4000 கிடைக்கும்

அதாவது விவசாயிகளின் விண்ணப்பம் உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர்களுக்கு மார்ச் மாதத்தில் முதல் தவணையும், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இரண்டாவது தவணையும் கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு இரண்டு தவணையாக ரூ.4000 கிடைக்கும்.

பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்வது எப்படி?

  • முதலில், நீங்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.pmkisan.gov.in ஐப் பார்வையிட வேண்டும்

  • அதில் Farmers corner என்பதை கிளிக் செய்யுங்கள்

  • பின்னர், New Farmer Registration என்பதை கிளிக் செய்யுங்கள்

  • பின், ஆதார் அட்டையின் விவரங்களை நிரப்பி continue என்பதைக் கிளிக் செய்க

  • இதன் பின் மற்றொரு பக்கம் திறக்கும், அதில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் உங்கள் விவரங்கள் தோன்றும். நீங்கள் முதல் முறையாக பதிவு செய்கிறீர்கள் என்றால், Record not found with given details, do you want to register on PM-KISAN Portal என கொடுக்கப்பட்ட விவரங்களுடன் பதிவு செய்ய விரும்புகீறீர்காள என தோன்றும்.

  • அதற்கு Yes and proceed என்பதைக் கிளிக் செய்யவும்.

  • பின் ஒரு படிவம் தோன்றும், அதில் கேட்கப்படும் தகவல்களை சரியாக நிரப்பி சேமிக்கவும்.

  • பின்னர், உங்கள் நிலத்தின் விவரங்கள் கேட்கப்படும்.

  • சரியான தகவலை நிரப்பி சேமிக்கவும்.

  • இதன் பின் பதிவு செயல்முறை முடிவுபெறும்.

  • பதிவு செய்த பின் உங்ளுக்கு ஒரு பதிவு எண் மற்றும் குறிப்பு எண் வழங்கப்படும்

  • அவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

  • ஆதார் அட்டை

  • குடியுரிமை சான்றிதழ்

  • நில ஆவணங்கள்

  • வங்கி கணக்கு விவரங்கள்

English Summary: PM Kisan funds to be released next week? If you register by March 31 you will get Rs.4000 !!
Published on: 24 March 2021, 11:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now