பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, காலாண்டுக்கு 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக 6000 ரூபாய் செலுத்தப்படும்.
பிஎம் கிசான் (PM Kisan)
மொத்தம் 12 தவணைகள் கிசான் பணம் இதுவரை விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த 2000 ரூபாய் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் கிசான் பணம் பெறத் தகுதியானவர்கள். எனினும், வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகள் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் பணம் பெறத் தகுதியில்லாதவர்கள் ஆவர். ஆனாலும், வருமான வரி செலுத்தக்கூடிய, தகுதியில்லாத விவசாயிகளுக்கும் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் தவறுதாக பணம் வந்துள்ளது.
இந்நிலையில், தவறுதலாக பணம் பெற்றுக்கொண்ட தகுதியில்லாத, வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகள் தங்களின் பணத்தை திருப்பி செலுத்தும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பீஹார் மாநிலத்தின் DBT இணையதளத்தில், “வருமான வரி செலுத்தியதற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு கிடைத்த தொகையை கட்டாயமாக இந்திய அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
இதன்படி, தகுதியில்லாத விவசாயிகள் கிசான் பணம் பெற்றிருந்தால் குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்தியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால்:
வங்கி கணக்கு எண்: 40903138323
IFSC: SBIN0006379
மற்ற காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால்
வங்கி கணக்கு எண்: 4090314046
IFSC: SBIN0006379
ஆகிய வங்கி கணக்குகளுக்கு கிசான் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும். இதுமட்டுமல்லாமல், பணத்தை திருப்பி செலுத்தியதற்கான பரிவர்த்தனை எண் (UTR) விவரங்களையும் விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
பரிவர்த்தனை எண் விவரத்தை வேளாண் ஒருங்கிணைப்பாளர் அல்லது மாவட்ட வேளாண் அதிகாரி ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மோசடி கும்பல்களிடம் சிக்காமல் உரிய வங்கி கணக்கு எண்ணுக்கு பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வெளுத்து வாங்கும் கனமழை: விவசாயிகளே விரைவாக பயிர் காப்பீடு செய்யுங்கள்!
மாதம் ரூ.64,000 பென்சன்: இந்த திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?