மத்திய அமைச்சரவையில் ஏற்கனவே புதியதாக 2 குழுக்களை அறிவித்த நிலையில் மீண்டும் 6 குழுக்களை மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. நடை முறை பரிவர்த்தனை எனும் பிரிவின் கீழ் குழுக்கள் மாற்றி அமைக்க பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் குழுக்களின் பெயர்களையும், இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பெயர்களும் வெளியிட்டுள்ளது.
குழுக்கள் மற்றும் அமைச்சர்கள்
மோடி தலைமயிலான அரசு 8 குழுக்களை அமைத்து பல்வேறு அமைச்சர்களை நியமித்துள்ளது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க இக்குழுக்களில் உள்ள அமைச்சர்கள் செயல் படுவார்கள். அனைத்து குழுவிலும் பிரதமர் மோடிக்கு அடுத்த படியாக அமித்ஷா மற்றும் நிர்மலா சீதா ராமன் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது.
நியமனங்களுக்கான குழு
இக்குழுவில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இடம் பெற்றுள்ளார்கள். மற்ற குழுக்களின் செயல் பாடுகள் மற்றும் ஏனைய முடுவுகள் இவ்விருவரின் ஒப்புதல் இன்றி செயல் படாது.மேலும் இவ்விருவரும் அனைத்து குழுக்களிலும் இடம் பெறுவார்கள்.
குடியிருப்புக்கான அமைச்சரவை குழு
இக்குழுவில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி, நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதா ராமன் மற்றும் ரயில்வே மற்றும் வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் இடம் பெற்றுள்ளார்கள்.
பொருளாதார விவகாரங்களுக்கான குழு
பெரும்பாலான அமைச்சர்கள் இதில் இடம் பெற்றுள்ளார்கள். நெடுஞ்சாலை துறை , நிதி துறை, வேளாண் துறை, ரயில்வே துறை, உணவு பதனிடும் துறை, தொழில் நுட்ப துறை, ஊரக வளர்ச்சி துறை, பெட்ரோலியம் துறை, என அனைத்து துறை அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு
இக்குழுவில் நிதி அமைச்சர், நுகர்வோர் மற்றும் பொது விநியோக துறை அமைச்சர், சட்டம் மற்றும் நிதி துறை அமைச்சர், வேளாண் மற்றும் விவசாகிகள் துறை அமைச்சர், சுற்று சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் துறைக்கான அமைச்சர் நாடாளுமன்ற விவகாரங்களுகள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல் விவகாரங்களுக்கான குழு
இக்குழுவில் நிதி அமைச்சர், நுகர்வோர் மற்றும் பொது விநியோக துறை அமைச்சர், சட்டம் மற்றும் நிதி துறை அமைச்சர், குடும்பம் மற்றும் புவி அரசியல் துறை, கனரக மற்றும் பொது துறை அமைச்சர், பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு
இக்குழுவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத், நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான குழு
இக்குழு ஏற்கனவே பிரதமர் மோடி அவர்களால் அமைக்க பட்டுள்ளது. இதில் நிதி அமைச்சர், நெடுஞ்சாலை துறை, ரயில்வே மற்றும் வர்த்தக தொழில் துறை அமைச்சர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு குழு
பெரும்பாலான அமைச்சர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். குழுவின் முக்கிய நோக்கம் தற்போது நிலவி வரும் வேலையின்மை பிரச்சனையை சரி செய்வதே ஆகும். அதிக அளவிலான வேலை வாய்ப்பினை உருவாக்குவதே ஆகும்.
மோடி மற்றும் அமித்ஷா தலைமையில் இவ்வனைத்து குழுக்களும் ஒன்றாக இணைத்து செயல் பட உள்ளது. சிறப்பு அழைப்பாளர்களாக சில அமைச்சர்களை ஒவ்வொரு குழுக்களிலும் நிர்ணியத்து மேலும் திறம் பட செயல் புரிய உள்ளது.
Anitha Jegadeesan
Krishi Jagran