அதிக மகசூல், பருவநிலைக்கு ஏற்ற உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். அப்போது புதிய பயிர் வகைகளின் முக்கியத்துவம் குறித்தும் வேளாண்மையில் மதிப்புக் கூட்டுதலின் அவசியம் குறித்தும் மோடி வலியுறுத்தினார். மேலும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விவாதித்த பிரதமர், மக்கள் எவ்வாறு சத்தான உணவை நோக்கி நகர்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டினார்
வேளாண் செலவை குறைக்க உதவும் : பிரதமர் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ரகங்கள் அதிக நன்மை பயக்கும் என்றும், அவை தங்கள் செலவைக் குறைக்க உதவும் என்றும், சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர், மேலும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.
ஒவ்வொரு மாதமும் உருவாக்கப்படும் புதிய ரகங்களின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையங்கள் முன்கூட்டியே எடுத்துரைத்து அவற்றின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
109 பயிர் ரகங்கள் அறிமுகம்
பிரதமர் வெளியிட்ட 109 வகைகளில் 34 வயல் பயிர்கள் மற்றும் 27 தோட்டக்கலை பயிர்கள் அடங்கும். வயல் பயிர்களில், சிறுதானியங்கள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, நார் மற்றும் பிற சாத்தியமான பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு தானியங்களின் விதைகள் வெளியிடப்பட்டன. தோட்டக்கலைப் பயிர்களில், பல்வேறு வகையான பழங்கள், காய்கறி பயிர்கள், தோட்டப் பயிர்கள், கிழங்கு பயிர்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் வெளியிடப்பட்டன.
அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
பின்னர், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது வெளியிடப்பட்ட 61 பயிர்களில் 109 வகைகள் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அவர்கள் அதிக உற்பத்தி செய்யவும், அதிக பணம் சம்பாதிக்கவும், குறைந்த செலவு செய்யவும் இவை உதவும் என்று கூறினார். இந்தப் பயிர்களின் விதைகள் காலநிலைக்கு உகந்தவை என்றும், பாதகமான வானிலையிலும் கூட நல்ல மகசூலை அளிக்கும் என்று அமைச்சர் சிவராஜ் சவுகான் இந்த பயிர் வகைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை என்றும் அவர் தெரிவித்தார்.
Read also: TNAU துணைவேந்தருக்கு கெளரவ கர்னல் பதவி வழங்கியதில் இருக்கும் சிறப்பம்சம் என்ன?
மேலும் மூன்று ஆண்டுகளுக்குள் விவசாயிகளுக்கு அனைத்து 109 வகைகளிலிருந்தும் விதைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
சுவையான மாம்பழ வகைகள் இறக்குமதி
சுவையான மாம்பழ வகைகளை இறக்குமதி செய்வது குறித்த கேள்ளவிக்கு பதில் அளித்த அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நமது சொந்த வகை மாம்பழங்கள் அதிக உற்பத்தித்திறன், அதிக அழகியல் மற்றும் சிறந்த பராமரிப்பு குணங்களைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் எனவே சுவையான மாம்பழ வகைகளை இறக்குமதி செய்வது தற்போது அவசியமில்லை என்றும் இந்த வகைகள் அனைத்தும் இயற்கை விவசாயத்திற்கு பொருத்தமானவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்
Read more:
இயற்கையின் அற்புத கொடை "பூஞ்சைகள்” - ஏன் தெரியுமா?
சொர்ணவாரி நெல் மற்றும் கம்பு பயிருக்கு பயிர் காப்பீடு- இறுதித்தேதி அறிவிப்பு!