News

Wednesday, 07 April 2021 02:49 PM , by: Daisy Rose Mary

பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும், வேளாண் சட்டங்கள் குறித்தும் தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகிறது என பிரதமர் மோடி கூறி உள்ளார். நம் பாஜக தொண்டர்கள் மக்களிடம் உண்மையான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக ஆண்டு விழா உரை

பாரதிய ஜனதா கட்சி. தொடங்கப்பட்டு இன்றுடன் 41-வது ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பா.ஜ.க தொண்டர்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்தும், வேளாண் சட்டங்கள் குறித்தும் தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுகிறது. விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்படும், சிலரின் குடியுரிமை பறிக்கப்படும், இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவோம் என்று சில தனிநபர்களும், அமைப்புகளும் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றன என வேதனை தெரிவித்தார்.

பாஜக தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

பாஜகவின் நல்ல திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை தடுக்க, அதன் பின்னணியில் மிகப்பெரிய சதி நிரம்பி இருக்கிறது. மக்களிடையே தவறான புரிதலை உருவாக்கி, அச்சத்தை பரப்பி, நாட்டில் அரசியல் நிலையற்றத் தன்மையை உருவாக்க இலக்கு வைத்துள்ளார்கள். இவையெல்லாம் பாஜக தொண்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இதுபற்றி நமது கட்சியினர் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த சட்டங்கள் குறித்தும், பாஜக அரசு குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை பாஜக தொண்டர்கள் ஏற்படுத்த வேண்டும்.

ஏழைகளுக்கான அரசு - பாஜக

பா.ஜ.க 5 ஆண்டுகளாக நேர்மையான ஆட்சியாலும், சேவையாலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து மக்களின் இதயத்தை வென்று வருகிறது. ஏழைகளுக்கு ஏற்ற திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்ததால், ஏழைகளும், கிராமங்களில் உள்ள மக்களும் பாஜகவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஏழை மக்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களை இந்த அரசு கொண்டுவந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)