நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 February, 2024 6:38 PM IST
PM Kisan 16 th installment

விவசாயிகள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிஎம் கிசான் 16-வது தவணை நிதியுதவியினை பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் விடுவித்தார். இதன் மூலம் ஏறத்தாழ 9 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திட்டங்களில் ஒன்று தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் ஆகும்.

பி.எம்.கிசான் திட்டம்:

இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது.

இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 9 கோடிக்கும்  அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர். இதனிடையே PM கிசானின் 13-வது தவணை பிப்ரவரி 27, 2023 அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 14-வது தவணையினை ஜூலை 27, 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் நடைப்பெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை விடுவித்தார்.

16 வது தவணை- இன்று விடுவிக்கப்பட்டது:

15-வது தவணையினை கடந்தாண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 16-வது தவணையினை இன்று பிப்.28 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விடுவித்தார்.

சுமார் 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 வது தவணை பெறும் பயனாளியின் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை நீங்களே சரிபார்க்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:

  • PM Kisan Samman Nidhi Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் (https://pmkisan.gov.in/ )
  • வலதுபுறத்தில் உள்ள 'பயனாளிகள் பட்டியல்' (Beneficiary List) என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதன்பின் தோன்றும் பக்கத்தில் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் என்கிற கேள்விகளுக்கு சரியான விவரங்களை தேர்ந்தெடுக்கவும்.
  • இதன்பின் 'Get Report' டேப்பினை கிளிக் செய்யவும்
  • 16-வது தவணை பெற்றுள்ள பயனாளிகளின் பட்டியல் விவரம் அப்பக்கத்தில் வரும். அவற்றில் உங்களது பெயரை சரிப்பார்த்துக் கொள்ளவும்.

PM kisan-ல் உங்களது தகவல்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் அல்லது கேள்விகள் இருப்பின், விவசாயிகள் பின்வரும் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்- 155261/011-24300606. நீங்கள் மெயில் மூலமாகவும் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். (pmkisan-ict@gov.in)

PM Kisan Yojana மூலம் பயனடையும் விவசாயிகளை அடையாளம் காண, சரிபார்ப்பு செயல்முறை அல்லது e-KYC அவசியமானது. e-KYC, ஆதார் விவரங்கள், நில விதைப்பு மற்றும் பிற விவரங்களை புதுப்பித்த விவசாயிகள் மட்டுமே அடுத்த தவணைக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் காண்க:

அரசின் மானியத்தோடு வீட்டுக் கொல்லைப்புறத்தில் அலங்கார வண்ண மீன் வளர்ப்பது எப்படி?

பாசிப்பயறு மற்றும் நிலக்கடலையில் புதிய இரகம் வெளியீடு- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?

English Summary: PM modi transfer the 16 th installment of PM Kisan to around 9 crore beneficiary farmers
Published on: 28 February 2024, 06:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now